search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடக ஐகோர்ட்
    X
    கர்நாடக ஐகோர்ட்

    மனைவியை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டாலும் கற்பழிப்பு தான்- கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பு

    மனைவியை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டாலும் அது கற்பழிப்பு தான் என்று கர்நாடக ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
    பெங்களூரு:

    பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண் தனது கணவர் மீது பெங்களூரு போலீசாரிடம் ஒரு பரபரப்பு புகாரை அளித்தார். அந்த புகாரில் திருமணம் ஆன நாள் முதல் தனது கணவர் பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், நான் கர்ப்பமாக இருந்தபோது என்னுடன் உடலுறவு கொண்டதால் கருச்சிதைவு ஏற்பட்டது என்றும், எனது மகளின் முன்பு உடலுறவு கொள்ள என்னை வற்புறுத்துகிறார் என்றும் கூறி இருந்தார்.

    மேலும் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார் என்றும் கூறினார். இந்த புகாரின்பேரில் பெண்ணின் கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் தன் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய போலீசாருக்கு உத்தரவிட கோரி அந்த பெண்ணின் கணவர் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி நாகபிரசன்னா முன்பு நடந்து வந்தது.

    இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்த நிலையில் பெண்ணின் கணவர் தாக்கல் செய்ய மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் நீதிபதி நாகபிரசன்னா கூறுகையில், அரசியலமைப்பின் கீழ் அனைத்து மனிதர்களையும் சமமாக கருத வேண்டும். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, மற்ற பாலினத்தவர்களாக இருந்தாலும் சரி. மனைவியின் விருப்பம் இல்லாமல் அவரை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டாலும் அது கற்பழிப்பு தான்.

    இவ்வாறு செய்வதன் மூலம் அந்த பெண்ணின் மனமும், உடலும் கடுமையாக பாதிக்கப்படும். பெண்ணிடம் கட்டாயப்படுத்தி கணவர் உடலுறவு கொள்வதை ஏற்க முடியாது. ஒரு ஆண், ஆண் தான். ஒரு செயல் செயல்தான், பலாத்காரம் அது பலாத்காரம் தான். திருமணம் செய்து கொண்டோம் என்பதற்காக கணவருக்கு சிறப்பு சலுகைகள் தர முடியாது. கணவர் என்பவர் தனது மனைவியை தனக்கு சொந்தமானவர் என்று பார்க்கிறார். கணவர் என்பவர் மனைவிகளை அடங்கி ஆள்பவர்களாக பழங்கால மரபுகளும், கலாச்சாரமும் பார்க்கிறது.

    இவ்வாறு நீதிபதி கூறினார்.
    Next Story
    ×