என் மலர்tooltip icon

    இந்தியா

    பயணியை காப்பாற்றும் ஆர்பிஎப் வீரர் (சிசிடிவி பதிவு)
    X
    பயணியை காப்பாற்றும் ஆர்பிஎப் வீரர் (சிசிடிவி பதிவு)

    ரெயிலில் இருந்து தவறி விழுந்த பயணி... நொடிப்பொழுதில் காப்பாற்றிய ஆர்.பி.எப். வீரர்

    பயணிகள் ஓடும் ரெயிலில் ஏற வேண்டாம், இறங்க வேண்டாம் என ரெயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
    மும்பை:

    மும்பையில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை, ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றி உள்ளார். 

    மும்பை வடாலா ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற பயணிகள் ரெயில் சற்று வேகமெடுத்தபோது, ஒரு பயணி ஓடிச் சென்று ஏறினார். ஆனால், அவர் திடீரென தடுமாறி பிளாட்பாரத்தில் விழுந்தார். 

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை வீரர், நொடிப்பொழுதில் ஓடிச் சென்று அந்த பயணியை வெளியே இழுத்தார். இதனால் அந்த பயணி அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார். இவை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகின. இந்த வீடியோவை மத்திய ரெயில்வே தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, பொதுமக்களுக்கு அறிவுறுத்தலை வழங்கி உள்ளது. 


    ‘வடாலா ரெயில் நிலையத்தில் ஓடும் உள்ளூர் ரெயிலில் ஏறும் போது தவறி கீழே விழுந்த ஒரு பயணியின் உயிரை ஆர்பிஎப் கான்ஸ்டபிள் நேத்ரபால் சிங் சரியான நேரத்தில் காப்பாற்றினார். பயணிகள் ஓடும் ரெயிலில் ஏற வேண்டாம், இறங்க வேண்டாம்’ என ரெயில்வே கேட்டுக்கொண்டுள்ளது. 

    இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    Next Story
    ×