search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    3-வது அலை குறைந்தாலும் டிசம்பர் வரை முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும்: தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அறிவுறுத்தல்

    கொரோனா 3-வது அலை குறைந்தாலும் டிசம்பர் வரை முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அறிவுறுத்தல்

    பெங்களூர்:

    கொரோனா 3-வது அலையின் பாதிப்பு இந்தியாவில் தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. தினசரி 4 ஆயிரத்துக்கு கீழ் சரிந்துள்ளது.

    இந்த நிலையில் 3-வது அலை பாதிப்பு குறைந்தாலும் பொதுமக்கள் டிசம்பர் வரை முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று கோவிட் தொழில்நுட்ப ஆலோசனைக்குழு அறிவுறுத்தி உள்ளது.

    இது தொடர்பாக அந்த குழுவின் அதிகாரிகள் கூறியதாவது:-

    முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பேணுதல் ஆகியவற்றை கட்டாயமாக்க வேண்டும். கொரோனா பாதிப்பு குறைந்தாலும், குறைந்தபட்சம் இந்த ஆண்டு இறுதி வரை முகக்கவசம் அணியுங்கள். டிசம்பர் வரை இந்த விதியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

    தொற்றுநோய் முற்றிலும் நீங்கிவிட்டதாக நாங்கள் நம்பும் வரை மக்கள் முகக்கவசம் அணிவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்பதே எங்களது கருத்தாகும்.

    தொற்று நோயின் முடிவு குறித்து உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கும். அதைத் தொடர்ந்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிடும். ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையே கொரோனாவின் 4-வது அலை பற்றிய கணிப்புகள் உள்ளன.

    அதன்பிறகு குறைந்தது 2 மாதங்கள் வரை கொரோனா பாதுகாப்பு விதிகள் தொடர வேண்டும்.

    அடுத்த 6 மாதங்கள் முக்கியமானதாக இருக்கும். இதனால் மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்வது முக்கியமாகும். இதனால் முகக்கவசம் அணிவதைத் தவிர வேறு வழியில்லை.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

    இதையும் படியுங்கள்... இந்தியாவில் புதிதாக 3,614 பேருக்கு கொரோனா

    Next Story
    ×