என் மலர்
இந்தியா

ராகுல் காந்தி
வெறுப்பை பரப்பி, மக்களை பிரித்து நாட்டை ஆள்கிறார்கள்- ராகுல் காந்தி பேச்சு
நாட்டை ஆள்பவர்கள் ஆத்திரத்தை பரப்புகிறார்கள், வெறுப்பை பரப்புகிறார்கள், நாட்டை பிளவுபடுத்துகிறார்கள் என ராகுல் காந்தி கூறினார்.
கோழிக்கோடு:
கேரள மாநிலம் கோழிக்கோடு முக்கம் பகுதியில் ஆதரவற்றோர் இல்ல திறப்பு விழாவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியதாவது:-
இன்று நம் நாட்டை ஆள்பவர்கள் ஆத்திரத்தை பரப்புகிறார்கள், வெறுப்பை பரப்புகிறார்கள், நாட்டை பிளவுபடுத்துகிறார்கள். நமது அரசாங்கம் பரப்பிய கோபத்தின் விளைவை நீங்களே பார்க்கலாம். வேலையில்லாத் திண்டாட்டம், விண்ணைத் தொடும் விலைவாசி என நமது பொருளாதாரத்திற்கு என்ன நேர்ந்திருக்கிறது என்பதை நீங்கள் பார்க்கலாம்.
மக்கள் பிளவுபட்ட நிலையில் ஒன்றுபட்டுச் செயல்படாததுதான் இதற்கெல்லாம் காரணம். மக்கள் தங்களை நடத்துவது போல் மற்றவர்களையும் நடத்த வேண்டும். அதுதான் நம் முன் உள்ள பணி.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக ராகுல் காந்தி, வயநாட்டில் காங்கிரஸ் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
Next Story






