search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மாணவர்கள்
    X
    மாணவர்கள்

    ஹங்கேரியில் இருந்து மேலும் 160 இந்தியர்கள் இன்று டெல்லி வந்தனர்

    உக்ரைன் தலைநகர் கீவ்வில் சுடப்பட்ட இந்தியர் ஹர்ஜோத்சிங் உக்ரைனில் இருந்து போலந்து சென்றடைந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் குணமடைந்ததால் போலந்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    புதுடெல்லி:

    நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டுக்கு எதிராக ரஷியா போர் தொடுத்துள்ளது.

    இதனால் உக்ரைனில் உள்ள 20 ஆயிரம் இந்தியர்கள் சிக்கி தவித்தனர். அவர்கள் பக்கத்து நாடுகளுக்கு அழைத்து வரப்பட்டு ஆபரே‌ஷன் கங்கா செயல் திட்டத்தின் கீழ் பயணிகள் விமானம், விமானப்படை விமானங்கள் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள்.

    நேற்று வரை 15 ஆயிரத்து 920 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இன்று 8 விமானங்கள் மூலம் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியா அழைத்துவரப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

     

    ரஷிய ராணுவம்

    இந்த நிலையில் உக்ரைனில் சிக்கி தவித்த மேலும் 160 இந்தியர்கள் இன்று காலை டெல்லி வந்தனர். அவர்கள் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் இருந்து அழைத்துவரப்பட்டனர்.

    இதற்கிடையே உக்ரைன் தலைநகர் கீவ்வில் சுடப்பட்ட இந்தியர் ஹர்ஜோத்சிங் உக்ரைனில் இருந்து போலந்து சென்றடைந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் குணமடைந்ததால் போலந்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் அங்கிருந்து இந்தியாவுக்கு வருவார்.

    இதையும் படியுங்கள்... பிரதமர் மோடியின் முழு முயற்சியால் உக்ரைனில் இருந்து உயிருடன் திரும்பி உள்ளோம்- மாணவர் பேட்டி

    Next Story
    ×