என் மலர்
இந்தியா

விபத்து
கான்கிரீட் கலவை இயந்திரம் கவிழ்ந்து 4 பேர் பலி
டிராக்டரில் இணைத்து இழுத்துச் செல்லப்பட்டபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் மற்றும் கான்கிரீட் இயந்திரம் இரண்டும் கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்தன.
ஜான்பூர்:
உத்தர பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டம், ஜாம்தாகா கிராமத்தில், கான்கிரீட் கலவை இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிராக்டரில் இணைத்து இழுத்துச் செல்லப்பட்டபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் மற்றும் கான்கிரீட் இயந்திரம் இரண்டும் கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்தன.
இதில் கான்கிரீட் கலவை இயந்திரத்தில் அமர்ந்து வந்த தொழிலாளர்கள் 3 பேர் மற்றும் சாலையில் சைக்கிளில் சென்ற ஒருவர் என 4 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக கேதாசராய் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






