என் மலர்

    இந்தியா

    ஆரோக்கிய வனம்
    X
    ஆரோக்கிய வனம்

    ஆரோக்கிய வனத்தை தொடங்கி வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆரோக்கிய வனம், ஆயுர்வேதத்தில் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் சுமார் 215 மூலிகைகள் மற்றும் தாவரங்களை கொண்டுள்ளது.
    குடியரசுத் தலைவர் மாளிகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆரோக்கிய வனத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

    சுமார் 6.6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆரோக்கிய வனம் மனித வடிவில் யோகா முத்திரையில் அமர்ந்து இருப்பதுபோல் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆயுர்வேதத்தில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் சுமார் 215 மூலிகைகளும், தாவரங்களையும் கொண்டுள்ளது.

    ஆரோக்கிய வனம்

    மேலும், ஆரோக்கிய வனத்தில் நீருற்றுகள், யோகா மேடை, நீர் கால்வாய், தாமரை குளம் மற்றும் காணும் இடம் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளது. ஆயுர்வேத தாவரங்களின் முக்கியத்துவத்தையும் அதன் நன்மைகளையும் மக்களுக்கு எடுத்துரைக்கும் நோக்கத்தில் ஆரோக்கிய வனம் உருவாக்கப்பட்டுள்ளதாக ராஷ்டிரபதி பவன் தெரிவித்துள்ளது. பொது மக்களும் ஆரேக்கிய வனத்தை காண வரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படியுங்கள்.. ஆபரேஷன் கங்கா திட்டம் - இந்தியர்களை மீட்க ஹங்கேரி புறப்பட்டார் மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி
    Next Story
    ×