என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
X
நவீன இந்தியாவின் வரலாற்றை ராகுல் காந்தி படிக்க வேண்டும் - ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்
Byமாலை மலர்19 Feb 2022 1:56 PM IST (Updated: 19 Feb 2022 1:56 PM IST)
கால்வான் பள்ளத்தாக்கு மோதல் தொடர்பான ராகுல் காந்தியின் கருத்து வேதனை அளிக்கிறது என்றும், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
கோண்டா:
உத்தர பிரதேச மாநிலம் கோண்டா நகரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது:
நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமரான பிறகு சீனாவும் பாகிஸ்தானும் நட்புறவு கொண்டதாக அவர் ( ராகுல் காந்தி) கூறினார். அவர் பண்டைய இந்தியாவின் வரலாற்றை படிக்கவில்லை, குறைந்தபட்சம் நவீன இந்தியாவின் வரலாற்றையாவது படிக்க வேண்டும்.
சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு பகுதியை பாகிஸ்தான், சீனாவிடம் ஒப்படைத்த போது ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டபோது இந்திரா காந்தி பிரதமராக இருந்தார்.
சீனா-பாகிஸ்தான் இடையே வர்த்தக பாதை கட்டுமான பணி தொடங்கியது போது மோடி அல்ல, மன்மோகன்சிங் பிரதமராக இருந்தார்.
(கால்வான்) மோதலில் ஏராளமான இந்திய வீரர்களும் 3-4 சீன வீரர்கள் மட்டுமே உயிரிழந்ததாக ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் கூறியது வேதனை அளிக்கிறது.
(இது குறித்து) மக்கள் பேசட்டும் என்று பிரதமர் கூறியதால், பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தும், நான் பதில் அளிக்கவில்லை. ஆனால் யதார்த்தம் எங்களுக்குத் தெரியும்.
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி இந்த அறிக்கையை வெளியிட்ட உடனேயே கல்வான் மோதலில் 38 முதல் 50 சீன வீரர்கள் கொல்லப்பட்டதாக ஆஸ்திரேலியாவின் புலனாய்வுப் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு ராஜ்நாத்சிங் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... சமாஜ்வாடி கட்சி பயங்கரவாதிகளை பாதுகாக்கிறது - யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு
Next Story
×