என் மலர்tooltip icon

    இந்தியா

    தண்டவாளத்தில் பைக்கை போட்டுவிட்டு உயிர் தப்பிய வாலிபர்
    X
    தண்டவாளத்தில் பைக்கை போட்டுவிட்டு உயிர் தப்பிய வாலிபர்

    ரெயில்வே கேட் மூடியிருக்கையில் அலட்சியமாக கிராசிங்... நூலிழையில் உயிர் தப்பிய வாலிபர்

    ரெயில் அதிவேகமாக வருவதை கண்ட வாலிபர் தண்டவாளத்திலேயே பைக்கை போட்டுவிட்டு எகிறி குதித்து ஓட்டம் பிடித்தார்.
    மும்பை:

    இருசக்கர வாகனத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, ரெயில் வந்ததால் பைக்கை தண்டவாளத்தில் போட்டுவிட்டு ஓடியதால் வாலிபர் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், ரெயில்வே கேட் மூடப்பட்டிருக்கும் நிலையில், இளைஞர் ஒருவர் பைக்கில் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்கிறார். அப்போது ரெயில் அதிவேகமாக வருவதை கண்ட அவர், தண்டவாளத்திலேயே பைக்கை போட்டுவிட்டு எகிறி குதித்து ஓட்டம் பிடித்தார். இதனால் அவரது பைக் மீது ரெயில் பயங்கரமாக மோதியது. அந்த வாலிபர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். 

    இந்த சம்பவம் மும்பையில் நடந்ததாக கூறப்படுகிறது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும், போக்குவரத்து விதிகளை பின்பற்றாத அந்த வாலிபரை கண்டித்துள்ளனர். 
    Next Story
    ×