search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராய்
    X
    மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராய்

    கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை வெளிநாட்டினருக்கு இந்திய குடியுரிமை?- அமைச்சர் பதில்

    வெளிநாட்டினருக்கு இந்திய குடியுரிமை வழங்கியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்து மூலம் பதில் அளித்தார்.
    பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று பல்வேறு விவகாரங்கள் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது, கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை வெளிநாட்டினருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது என்றும் அதற்கான காரணங்களை தெளிவுப்படுத்தவும் கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்து மூலம் பதில் அளித்தார்.

    இந்திய குடியுரிமை

    அந்த பதிலில், கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 4,844 வெளிநாட்டினருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டம் 1955-ன் கீழ் கடந்த 2017-ம் ஆண்டில் 817 பேருக்கும், 2018-ல் 628 பேருக்கும், 2019-ல் 987 பேருக்கும், 220-ல் 639 பேருக்கும், 2021-ல் 1,773 பேருக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

    இந்த குடியுரிமைகள், பிரிவு 5-ன் கீழ் தகுதியுள்ள வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை, பிரிவு 6 இன் கீழ் நடுநிலைப்படுத்துவதன் மூலமும் அல்லது பிரிவு 7-ன் கீழ் குடியுரிமைச் சட்டம், 1955-ன் கீழ் பிரதேசத்தை இணைப்பதன் மூலமும் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதையும் படியுங்கள்.. ஹிஜாப் அணிவதால் மாணவிகள் பள்ளிக்கு செல்வதை மறுப்பது பயங்கரமானது: மலாலா
    Next Story
    ×