search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கோப்புப் படம்
    X
    கோப்புப் படம்

    ஹிஜாப் விவகாரம் - மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

    ஹிஜாப் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் மக்களவையில் கோரிக்கை விடுத்தனர்.
    புதுடெல்லி:

    கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனால் சில கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவ, மாணவியர்கள் குல்லா, ஹிஜாப், பர்தா, புர்கா போன்றவை அணிந்து வர தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இதனை ஏற்கமறுத்த இஸ்லாமிய மாணவிகள், தங்கள் உரிமையில் தலையிடுவதாக கூறி ஹிஜாப் அணிந்தே கல்லூரிக்கு வந்தனர். 
    இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    ஹிஜாப் விவகாரம் தொடர்பாக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. சில இடங்களில் போலீசார் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். இதனால் கல்லூரிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த விவகாரம் இன்று பாராளுமன்ற மக்களவையிலும் எதிரொலித்தது. 

    இந்நிலையில், ஹிஜாப் விவகாரத்தை ஏற்க மறுப்பதாகக் கூறி காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

    Next Story
    ×