என் மலர்

  இந்தியா

  பா.ஜனதா தேர்தல் அறிக்கை வெளியீடு
  X
  பா.ஜனதா தேர்தல் அறிக்கை வெளியீடு

  உ.பி. சட்டசபை தேர்தல்: தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அறிவித்த பா.ஜனதா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் இரு சக்கர வாகனம், 60 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் என பல்வேறு இலவச வாக்குறுதிகளை பா.ஜனதா அறிவித்துள்ளது.
  உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தல் வருகிற 10-ந்தேதி முதல் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. நாளைமறுநாள் முதல் கட்ட தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இன்று பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

  தேர்தல் அறிக்கை வெளியிட்டு நிகழ்ச்சியில் அமித் ஷா, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேர்தல் அறிக்கையில் ‘‘அனைத்து விவசாயிகளுக்கும் நீர்ப்பாசன நோக்கத்திற்காக இலவச மின்சாரம் வழங்கப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.

  ஹோலிப் பண்டிகை, திபாவளி பண்டிகையை முன்னிட்டு பெண்களுக்கு இலவச சிலிண்டர், 60 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம், கல்லூரி பெண்களுக்கு இலவசமாக இரு சக்கர வாகனம் வழங்கப்படும். மேலும், பல்வேறு இலவச அறிவிப்புகளை தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×