என் மலர்

  இந்தியா

  டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் செல்போன் பார்த்த படி தண்டவாளத்தில் விழுந்த பயணி
  X
  டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் செல்போன் பார்த்த படி தண்டவாளத்தில் விழுந்த பயணி

  டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் செல்போன் பார்த்த படி தண்டவாளத்தில் விழுந்த பயணி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லியில் உள்ள சதாரா மெட்ரோ ரெயில் நிலையத்தில் செல்போனை பார்த்துக்கொண்டே நடை மேடையில் விழுந்த பயணியை பாதுகாப்பு படை வீரர் காப்பாற்றினார்.
  புதுடெல்லி:

  டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணியை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ஓடிச்சென்று காப்பாற்றும் காட்சி இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.

  டெல்லியில் உள்ள சதாரா மெட்ரோ ரெயில் நிலையத்தில் பயணி ஒருவர் செல்போனை பார்த்துக்கொண்டே நடை மேடையில் நடந்து கொண்டு இருந்தார்.

  திடீரென்று அவர் செல்போன் பார்த்த படி பிளாட்பார விளிம்பில் இருந்து தண்டவாளத்திற்குள் விழுந்தார். இதை எதிர்ப்புற பிளாட்பாரத்தில் நின்றபடியே மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் பார்த்துக் கொண்டு இருந்தார்.

  பயணி தண்டவாளத்தில் விழுந்ததும் பாதுகாப்பு படை வீரர் ஓடிச்சென்று தண்டவாளத்தில் குதித்து அந்த பயணியை தூக்கி நடைமேடையில் ஏற்றி காப்பாற்றினார்.

  மெட்ரோ ரெயில் வரும் முன்பே அவர் அந்த பயணியை மீட்டார். இதன் காரணமாக அங்கு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த வீடியோ காட்சியை மத்திய தொழில் பாதுகாப்பு படை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

  இந்த காட்சி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
  Next Story
  ×