என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
பிரதமர் மோடி நிகழ்ச்சியை புறக்கணிக்க தெலுங்கானா முதலமைச்சர் முடிவு
Byமாலை மலர்5 Feb 2022 3:56 AM IST (Updated: 5 Feb 2022 4:05 AM IST)
ஐதராபாத் வரும் பிரதமரை வரவேற்க அமைச்சர் ஒருவரை, கே.சி.சந்திரசேகரராவ் நியமித்துள்ளார்.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் இன்று நடைபெறும் இரண்டு நிகழச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். படன்சேருவில் உள்ள சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிறுவனத்தின் 50 வது ஆண்டு விழாவை அவர் தொடங்கி வைக்கிறார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியை புறக்கணிக்க தெலுங்கானா முதலமைச்சர் கே.சி.சந்திரசேகரராவ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் மோடியை வரவேற்கவும், தெலுங்கானா மாநிலம் சார்பில் பிரதமரின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தெலுங்கானா கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்ரீனிவாஸ் யாதவ்வை, சந்திரசேகர ராவ் நியமித்துள்ளார்.
கடந்த 2020 ஆண்டு பிரதமர் மோடி பங்கேற்ற பாரத் பயோடெக் நிறுவன நிகழ்ச்சியை சந்திரசேகரராவ் புறக்கணித்தார்.. ஐதராபாத் மாநகராட்சி தேர்தலின் போது பா.ஜ.க., டி.ஆர்.எஸ். தலைவர்கள் இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது.
பிரதமர் மோடி பல்வேறு மாநில நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது அந்த மாநிலத்திற்கு உரிய கலாச்சார உடை அணிவதை கேலி செய்து சந்திரசேகர ராவ் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியை அவர் தொடர்ந்து புறக்கணித்து வருவதற்கு தெலுங்கானா பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்... புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க திட்ட அறிக்கை-மாநிலங்களிடம் மத்திய அரசு கோரிக்கை
Next Story
×