search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஹர்ஸ்மிரத் கவுர் பாதல், அரவிந்த் கெஜ்ரிவால்
    X
    ஹர்ஸ்மிரத் கவுர் பாதல், அரவிந்த் கெஜ்ரிவால்

    எங்கெல்லாம் தேர்தல் நடைபெறுகிறதோ, அங்கெல்லாம் கெஜ்ரிவால் செல்வார்: எஸ்.ஏ.டி. கடும் தாக்கு

    பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தால், பல்வேறு நலத்திட்டங்களை செய்வதாக கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார்.
    பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த வருடம் தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. டெல்லியில் ஆட்சியமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சி, அண்டை மாநிலமான பஞ்சாபிலும் ஆட்சியை பிடிக்க முயற்சி செய்து வருகிறது.

    இதனால், அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் அடிக்கடி பஞ்சாப் சென்று வருகிறார். அவர், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பஞ்சாப் மாநில ஒவ்வொரு பெண்களுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற கவர்ச்சிகரமான திட்டத்தை அறிவித்தார்.

    இதனால் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆடிப்போனது. ஏற்கனவே, பஞ்சாப் மாநிலம் நிதிச்சுமையில் சிக்கி தவிக்கும் நிலையில், பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் எப்படி கொடுக்க முடியும் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

    ஆனால், கெஜ்ரிவால் தனது வாக்குறுதியில் உறுதியாக உள்ளார். இந்த நிலைியல், சிரோன்மணி அகாலி தளம் கட்சி தலைவர் ஹர்ஸ்மிரத் கவுர் பாதல், கெஜ்ரிவால் மீது விமர்சனம் வைத்துள்ளார். ஹர்ஸ்மிரத் கவுர் பாதல் ‘‘கெஜ்ரிவால் எங்கெல்லாம் தேர்தல் நடக்கிறதோ, அங்கெல்லாம் செல்வார். 2017-ம் ஆண்டும் இதை செய்தார். தவறான வாக்குறுதிகளை அளித்தார். பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி எதிர்க்கட்சியான நிலையிலும், ஐந்து வருடங்கள் அவர் பஞ்சாப் மாநிலத்திற்கு வரவில்லை. அவர் அல்லது அவர்களுடைய எம்.எல்.ஏ.கள் கூட வரவில்லை’’ என்றார்.
    Next Story
    ×