search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராஜ்நாத் சிங்
    X
    ராஜ்நாத் சிங்

    ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: மக்களவையில் விளக்கம் அளித்த ராஜ்நாத் சிங்

    ஹெலிகாப்டர் வெலிங்டனை அடைவதற்கு 12 நிமிடங்களுக்கு முன் விபத்துக்குள்ளானது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
    தமிழகத்தின் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படையில் இருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு 14 பேருடன் சென்ற ராணுவ ஹொலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

    இச்சம்பவம் குறித்து இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிபின் ராவத் சென்ற விமானம் 11.35 மணிக்கு புறப்பட்டது. வெலிங்டனை சென்றடைவதற்கு 12 நிமிடங்கள் இருக்கும்போது ஹெலிகாப்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. தொடர்பு துண்டிக்கப்பட்டதும் விமானம் விபத்துக்குள்ளானது. உள்ளூர் மக்கள் கொடுத்த தகவலின்படி மீட்பு பணி நடைபெற்றது. உடனடியாக உடல்கள் மீட்டகப்பட்டன.

    ராணுவத்தின் முப்படைகள் சார்பில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை விமானப்படை மார்ஷல் மனவந்த்ரா சிங் தலைமையில் நடைபெறும். விசாரணை குழு நேற்று வெலிங்டன் சென்றடைந்தனர். அவர்கள் விசாரணையை தொடங்கிவிட்டனர்.

    குரூப் கேப்டன் வருண் சிங் உடல்நிலை மோசமாக உள்ளது. தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவர் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் இருந்து பெங்களூரு கமாண்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்.  அவருக்கு தற்போது உயிர்காக்கும் கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய உயிரை காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

    பிபின் ராவத் இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும். அதுபோல் மற்ற வீரர்களின்  இறுதிச் சடங்குகளும் ராணுவ மரியாதையுடன் நடைபெறும்

    இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
    Next Story
    ×