search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலநடுக்கம்
    X
    நிலநடுக்கம்

    சித்தூர் அருகே திடீர் நில நடுக்கம் - பூமியில் இருந்து சத்தம் கேட்டதால் பரபரப்பு

    சித்தூர் அருகே நிலநடுக்கம் மற்றும் பூமியில் இருந்து வந்த சத்தத்தை கேட்ட அப்பகுதி கிராம மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே வந்து தெருவில் தஞ்சமடைந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பெத்ததிப்ப சமுத்திரம் அருகே உள்ள பட்டவான்ல பள்ளி மற்றும் சானுமா குலப்பள்ளியில் நேற்று முன்தினம் இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் பூமியில் இருந்து அதிக அளவில் சத்தம் கேட்டது.

    இதனால் வீட்டில் இருந்த பாத்திரங்கள் உருண்டு கீழே விழுந்தன. நிலநடுக்கம் மற்றும் பூமியில் இருந்து வந்த சத்தத்தை கேட்ட அப்பகுதி கிராம மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே வந்து தெருவில் தஞ்சமடைந்தனர்.

    இதேபோல் நேற்று மாலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் இந்த கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பீதியடைந்தனர்.

    இதுகுறித்து போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மண்டல பிரஜா பரிசத் தலைவர் கிரிதர் ரெட்டி மற்றும் அதிகாரிகள் கிராம பகுதிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    லேசான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இதைக்கண்டு பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை என கிராம மக்களுக்கு தெரிவித்தனர். இருப்பினும் நிலநடுக்கம் மற்றும் பூமியில் வந்த சத்தம் காரணமாக அப்பகுதி மக்கள் பீதியில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.

    Next Story
    ×