search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல்
    X
    பெட்ரோல்

    பெட்ரோல், டீசல் விலையை குறைத்தார் பூபேஷ் பாகல்

    மத்திய அரசு கலால் வரியை குறைத்துள்ள நிலையில், காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் சத்தீஸ்கரில் பெட்ரோல், டீசல் விலை மீதான வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது.
    ராய்ப்பூர்:

    மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை ரூ.5 என்ற அளவிலும், டீசல் மீதான கலால் வரியை ரூ.10 என்ற அளவிலும் குறைத்தது. இதனால் இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டது.

    கலால் வரியைக் குறைத்த மத்திய அரசு, மக்கள் மேலும் பயனடையும் வகையில் மாநில அரசுகள் வாட் வரியை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது. அதன்படி, பாஜக ஆளும் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைத்தன.
     
    இதற்கிடையே, பஞ்சாப், ராஜஸ்தானிலும் பெட்ரோல், டீசல் விலை மீதான வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், பெட்ரோல் மீதான வாட் வரியில் ஒரு சதவீதமும், டீசல் மீதான வாட் வரியில் 2 சதவீதமும் குறைக்கப்பட்டது.
    இந்த வரி குறைப்பு மூலம் அரசுக்கு ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என அம்மாநில முதல் மந்திரி பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார். 

    Next Story
    ×