search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சரவை பதவியேற்பு
    X
    அமைச்சரவை பதவியேற்பு

    ராஜஸ்தான் அமைச்சரவை மாற்றம்- 15 புதிய மந்திரிகள் பதவியேற்பு

    ராஜஸ்தான் மாநில அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து மந்திரிகளும் ராஜினாமா செய்துவிட்டு புதிய அமைச்சரவை அமைக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் தனது ஆதரவாளர்களுடன் கடந்த ஆண்டு போர்க்கொடி தூக்கினார். இந்த மோதலால் கெலாட்டுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

    காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தியது. தனது ஆதரவாளர்களுக்கு மந்திரிசபையில் இடம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். அது நிறைவேற்றப்படாததால் சச்சின் பைலட் அதிருப்தியில் இருந்தார்.

    அமைச்சர் பதவியேற்பு

    இதற்கிடையே ராஜஸ்தான் அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்படும் என்று அசோக் கெலாட் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறி இருந்தார். இந்த பணிகளுக்காக காங்கிரஸ் பொதச்செயலாளர் அஞ்சய் மக்கான் ஜெய்ப்பூர் சென்றார்.

    ராஜஸ்தான் மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் அனைத்து மந்திரிகளும் ராஜினாமா செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து அனைவரும் ராஜினாமா செய்தனர். புதிய அமைச்சரவை பதவி ஏற்பதற்காக அனைத்து மந்திரிகளும் பதவி விலகினர்.

    இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் புதிய அமைச்சரவை இன்று மாலை பதவி ஏற்றது. 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆட்சி பொறுப்பு ஏற்றப்பிறகு கெலாட் மந்திரிசபை முதல் முறையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். 11 பேர் கேபினட் மந்திரிகளாகவும், 4 பேர் இணை மந்திரிகளாகவும் பதவி ஏற்றனர். 12 பேர் புதுமுகங்கள் ஆவார்கள். அனைவருக்கும் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
    Next Story
    ×