என் மலர்

  செய்திகள்

  கங்கனா ரணாவத்
  X
  கங்கனா ரணாவத்

  இன்ஸ்டாகிராமில் சர்ச்சை கருத்து - நடிகை கங்கனா ரணாவத் மீது போலீசில் புகார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சமூக ஊடகங்களில் தேசத்துரோக மற்றும் இழிவான கருத்துக்களை நடிகை கங்கனா ரணாவத் பதிவு செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
  புதுடெல்லி:

  நடிகை கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி  பதிவிட்டுள்ளார். தனது சமூக வலைத்தள பதிவில் அவர் விவசாயிகளின் போராட்டம் குறித்து ‘விவசாயிகளின் போராட்டம் காலிஸ்தான் நடவடிக்கை போன்றது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

  இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டதற்காக டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மை குழு,  நடிகை கங்கனா ரணாவத் மீது போலீசில் புகார் அளித்துள்ளது. அந்த புகாரில் சமூக ஊடகங்களில் தேசத்துரோக மற்றும் இழிவான கருத்துக்களை நடிகை கங்கனா ரணாவத் பதிவு செய்ததாக குறிப்பிட்டுள்ளனர்.இதற்காக மும்பை நகர கூடுதல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  நடிகை கங்கனா ரணாவத் மீது போலீசில் புகார்

  மேலும், மற்றொரு பதிவில் நடிகை கங்கனா ‘இந்தியா ஒரு ஜிஹாதிஸ்ட் தேசம்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்காக இந்திய இளையோர் காங்கிரஸ் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×