search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜ்நாத் சிங்
    X
    ராஜ்நாத் சிங்

    இந்திய பகுதிகளை ஆக்கிரமிக்க முயன்றால் தக்க பதிலடி- ராஜ்நாத்சிங் எச்சரிக்கை

    1971-ல் நடந்த போரில் இந்தியா பெற்ற வெற்றி அனைவருக்கும் நினைவிருக்கும். எனவே அண்டை நாடுகள் மனபிரம்மையுடன் வாழ வேண்டாம்.

    டேராடூர்:

    உத்தரகாண்ட் மாநிலம் பிதோராகர் மாவட்டம் சவுல்கேட்முனோகோட் பகுதியில் பா.ஜனதா தியாகிகளை கவுரவிக்கும் யாத்திரையின் 2-வது கட்டத்தை மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.

    ராணுவ வீரர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதிய பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. முப்படைகளில் ஓய்வூதியத்தை மறுஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளேன். இதுபோன்ற சீரமைப்பை மேற்கொள்வதற்கு மத்திய அரசுக்கு அரசியல் பலம் உள்ளது.

    அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேணுவதையே இந்தியா விரும்புகிறது. இந்தியா எப்போதும் எந்த நாட்டையும் தாக்கியது இல்லை. அந்நிய மண்ணை நாம் ஆக்கிரமிப்பதும் இல்லை. ஆனால் சிலர் இதை புரிந்து கொள்வதில்லை. இது அவர்களது வழக்கமா அல்லது குணாசயமா? என்று தெரியவில்லை.

    மத்திய அரசு

    பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் இந்தியாவை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது. பாகிஸ்தான் அத்துமீறினால் எல்லையில் பதிலடி தருவது மட்டுமல்ல அதன் நிலப்பரப்புக்குள் சென்றும் வான்வழி தாக்கு தலை நடத்துவோம் என்று தெளிவான தகவலை நாம் கொடுத்திருக்கிறோம்.

    மற்றொரு அண்டை நாடும் சீனா வி‌ஷயங்களை புரிந்து கொள்வதில்லை. நமது நாட்டின் ஒரு அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்க எந்த நாடாவது முயன்றால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்.

    1971-ல் நடந்த போரில் இந்தியா பெற்ற வெற்றி அனைவருக்கும் நினைவிருக்கும். எனவே அண்டை நாடுகள் மனபிரம்மையுடன் வாழ வேண்டாம்.

    லிபுலேக் கனவாய் முதல் மானசரோவர் வரை செல்லும் சாலையை நான் சமீபத்தில் திறந்து வைத்தேன். இது தொடர்பாக நேபாளத்தில் தவறான புரிதலை ஏற்படுத்த முயற்சி நடந்தது. ஆனாலும் அந்த நாட்டுடன் ஆன நமது நெருங்கிய கலாச்சார உறவுகளை அதனால் பாதிக்க செய்ய முடியவில்லை.

    டேராடூனில் ராணுவ நினைவை போற்றும் வகையில் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. இது பிரதமரின் கனவு திட்டம் ஆகும். அந்த நினைவகத்தில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களின் பெயர்களும் அவர்களது கிராமத்தின் பெயரும் கல்வெட்டாக பொறிக்கப்படுவதை மாநில அரசு உறுதி செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்... கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம்

    Next Story
    ×