search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீனா ஒரு வருடத்தில் 4 கிராமங்களை நிர்மாணித்தது
    X
    சீனா ஒரு வருடத்தில் 4 கிராமங்களை நிர்மாணித்தது

    இந்திய எல்லைப்பகுதியில் சீனா ஒரு வருடத்தில் 4 கிராமங்களை நிர்மாணித்தது -செயற்கை கோள் படங்கள்

    இந்தியாவின் பூடான் எல்லைப்பகுதியில் சீனா ஒரு வருடத்தில் 4 கிராமங்களை நிர்மாணித்து உள்ளது. இது குறித்த செயற்கை கோள் படங்கள் வெளியாகி உள்ளன.
    புதுடெல்லி:

    இந்திய எல்லையில்  சீன ராணுவ முன்னேற்றம்  குறித்து முன்னணி செயற்கைக்கோள் பட நிபுணர் ஒருவர் புதிய செயற்கைக்கோள் படங்களை டுவிட் செய்து உள்ளார்.

    இன்டெல் ஆய்வகத்தின் உலகளாவிய ஆராய்ச்சியாளர்  வெளியிட்டு உள்ள இந்த செயற்கைக்கோள்படம்  புவிசார் அரசியல் புலனாய்வு நிபுணர்களின் ஆழமான பகுப்பாய்வுகளைக் கொண்டுள்ளது.

    அதில் சீனா கடந்த ஆண்டு பூடான் பிரதேசத்தில் 4 கிராமங்களை நிர்மாணித்ததாகக் கூறப்படுகிறது. ஏறக்குறைய 100 சதுர கி.மீ பரப்பளவில் பல புதிய கிராமங்கள் பரவி காணப்படுகின்றன.  இந்த சர்ச்சைக்குரிய நிலம் டோக்லாம் பீடபூமிக்கு அருகில் உள்ளது. 

    அங்கு 2017 ஆம் ஆண்டில் இந்தியாவும் சீனாவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன, அதன் பிறகு இந்தியா மற்றும் சீனா  இடையேயான சர்ச்சை பகுதியில் சாலை கட்டுமான நடவடிக்கைகளை சீனா  மீண்டும் தொடங்க இந்திய பாதுகாப்புகளைத் தவிர்த்தது.

    பூடான் மண்ணில் புதிய கட்டுமானம் இந்தியாவிற்கு கவலையளிப்பதாக உள்ளது. ஏனெனில் இந்தியா வரலாற்று ரீதியாக பூடானுக்கு  அதன் ஆயுதப் படைகளுக்கு தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறது. 

    பூடான் தனது நில எல்லைகளை மறுபரிசீலனை செய்ய தொடர்ந்து சீனா அழுத்தம் கொடுத்து வருகிறது. 

    இந்த கிராமங்கள் மே 2020 மற்றும் நவம்பர் 2021 க்கு இடையில் கட்டப்பட்டு உள்ளன.


    Next Story
    ×