என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கட்சிரோலி என்கவுண்டர்- பலியான மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை 27 ஆக உயர்வு
Byமாலை மலர்16 Nov 2021 11:43 PM IST (Updated: 16 Nov 2021 11:43 PM IST)
கட்சிரோலி மாவட்டம் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்தின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள மார்டின்டோலா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக காவல்துறைக்கு கடந்த 13ம் தேதி தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆயுதம் தாங்கிய கமாண்டோ போலீசார் அப்பகுதிக்கு சென்று சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, கோர்சி பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். போலீசாரும் பதிலடி கொடுத்தனர். இந்த என்கவுண்டரில் 26 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
இந்நிலையில், என்கவுண்டர் நடைபெற்ற பகுதியில் மேலும் ஒரு மாவோயிஸ்டின் உடல் கிடைத்தது. இதையடுத்து, என்கவுண்டரில் பலியான மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்...பெட்ரோல், டீசல் விலையை குறைத்தார் அசோக் கெலாட்
Next Story
×