என் மலர்

  செய்திகள்

  கனமழை
  X
  கனமழை

  கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டதுடன், அங்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  திருவனந்தபுரம்:

  கேரள மாநிலத்தில் கனமழை காரணமாக பல்வேறு ஆறுகள் அபாயகரமான நிலையை எட்டியுள்ளன. இதனால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

  தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

  இந்நிலையில், கேரளாவின் இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், காசர்கோடு, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதுடன் 6 முதல் 20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

  மற்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்வதுடன் 6 முதல் 11 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது 

  Next Story
  ×