என் மலர்

  செய்திகள்

  சோனு சூட் பேட்டி
  X
  சோனு சூட் பேட்டி

  பஞ்சாப் சட்டசபை தேர்தலில் தங்கையை களமிறக்கும் நடிகர் சோனு சூட்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சூட், மோகா தொகுதியில் போட்டியிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
  மோகா:

  சமூக அக்கறை, ஏழைகளுக்கு செய்யும் உதவிகளால் மிகவும் பிரபலமான பாலிவுட் நடிகர் சோனு சூட் விரைவில் அரசியலுக்கு வருவார்  என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாக அவரது தங்கை மாளவிகாவை அரசியலில் களமிறக்குகிறார்.

  பஞ்சாப் மாநிலம் மோகாவில் சோனு சூட் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “என் சகோதரி மாளவிகா சூட் அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய ஆர்வமாக இருக்கிறார். பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவார். எந்த கட்சியில் சேர்ந்து போட்டியிடுவார் என்பதை பின்னர் அறிவிப்பேன்” என்றார்.

  அப்போது, நீங்களும் அரசியலுக்கு வருவீர்களா என சோனுவிடம்  நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த சோனு, ‘முதலில் மாளவிகாவை ஆதரிப்பது முக்கியம். அவர் மோகாவில் உள்ள எங்கள் வேர்களுடன் இணைந்துள்ளார். எனது எதிர்கால திட்டங்களை பின்னர் வெளியிடுவேன்’ என்றார்.

  எனவே, சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சூட், மோகா தொகுதியில் போட்டியிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
  Next Story
  ×