search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கங்கனா ரணாவத்
    X
    கங்கனா ரணாவத்

    எனது கேள்விகளுக்கு பதிலளியுங்கள், பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்கிறேன் - கங்கனா ரணாவத்

    சுதந்திரம் குறித்து அவதூறாகப் பேசிய கங்கனா ரணாவத்தின் பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
    புதுடெல்லி:

    பத்மஸ்ரீ விருது பெற்ற கங்கனா ரணாவத் தனியார் டி.வி. சேனல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், 1947ல் நம் நாடு பெற்றது சுதந்திரம் அல்ல, பிச்சை. உண்மையான சுதந்திரம் 2014ல் தான் கிடைத்தது என தெரிவித்தார்.

    கங்கனா ரணாவத்தின் இந்த சர்ச்சையான பேச்சுக்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

    இந்நிலையில், எனது சில கேள்விகளுக்கு பதிலளித்தால் பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்கத் தயார் என பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், எனக்கு தெரிந்தவரை 1947-ம் ஆண்டில் எந்த போரும் நடக்கவில்லை. நடந்திருந்தால் அது பற்றி யாராவது எனக்கு சொல்லட்டும். வெள்ளையர்கள் நாட்டை ஏன் பிரித்தனர்?. 1947ல் சுதந்திரத்தைக் கொண்டாடுவதற்கு பதில், மக்கள் ஒருவருடன் ஒருவர் அடித்துக் கொண்டது ஏன்? 

    எனது கேள்விக்கான பதில்களை யாராவது சொல்லட்டும். அதன்பின், 1947ல் பெற்ற சுதந்திரத்தை பிச்சை என கூறியதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு, எனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதையும் திருப்பிக் கொடுத்து விடுவேன் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×