search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமீர் வான்கடே
    X
    சமீர் வான்கடே

    போதைப் பொருள் வழக்கில் சர்ச்சை அதிகாரி சமீர் வான்கடே டிரான்ஸ்பர்

    சொகுசு கப்பலில் நடத்தப்பட்ட சோதனை போலியானது என மகாராஷ்டிர மந்திரி நவாப் மாலிக் குற்றம் சாட்டினார்.
    மும்பை :

    போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த மாதம் 2-ம் தேதி மும்பை - கோவா சொகுசு கப்பலில் சோதனை நடத்தினர். அப்போது போதை விருந்தில் பங்கேற்ற நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான்(23), உள்ளிட்டவர்களை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தற்போது ஆர்யன்கான் உள்ளிட்டோருக்கு மும்பை ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது. 

    ஆர்யன்கானை கைது செய்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே மீது மகாராஷ்டிர மந்திரி நவாப் மாலிக் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். குறிப்பாக, சொகுசு கப்பலில் நடத்தப்பட்ட சோதனை போலியானது என கூறினார்.

    இதற்கிடையே, போதைப் பொருள் வழக்கில் பொது சாட்சியான பிரபாகர் சாயில், போதைப் பொருள் வழக்கில் ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் நடந்ததாக குற்றம்சாட்டினார். 

    இந்நிலையில்,  என்.சி.பி அதிகாரி சமீர் வான்கடே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மூத்த போலீஸ் அதிகாரி சஞ்சய் சிங் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு ஆர்யன்கான் உள்பட ஏனைய 4 பேர் மீதான போதைப் பொருள் வழக்கை விசாரிக்க உள்ளது என போதைப் பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 

    Next Story
    ×