என் மலர்
செய்திகள்

மோடி, பூபேந்திர பட்டேல்
5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சூழ்நிலை குறித்து குஜராத் மாநில முதல்வரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி
இந்திய நேரப்படி இன்று மதியம் 3.15 மணிக்கு குஜராத் மாநிலம் துவார்கா பகுதியில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
குஜராத் மாநிலத்தின் துவார்காவில் இருந்து வடமேற்கு பகுதியில் 223 கி.மீட்டர் தொலைவில் இன்று மதியம் 3.15 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் 10 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக நில அதிர்வுக்கான தேசிய மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. இந்த நிலையில், பிரதமர் மோடி, குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர பட்டேலிடம், நிலநடுக்கத்தால் எழுந்துள்ள சூழ்நிலை குறித்து போன் மூலம் கேட்டறிந்தார்.
Next Story