என் மலர்

  செய்திகள்

  கல்வீச்சில் உடைந்த கார் கண்ணாடி
  X
  கல்வீச்சில் உடைந்த கார் கண்ணாடி

  எக்ஸ்பிரஸ் சாலையில் வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கிய கும்பல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வதோதரா-அகமதாபாத் விரைவு சாலையில் அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென கற்களை வீசி தாக்கியதால் பயணிகள் பீதி அடைந்தனர்.
  ஆனந்த்:

  குஜராத் மாநிலத்தின் ஆனந்த் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் திடீரென வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. வதோதரா-அகமதாபாத் விரைவு சாலையில் சமர்கா கிராமம் அருகே நேற்று இரவு இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதில்,  லாரிகள், 4 கார்கள் என மொத்தம் 7 வாகனங்கள் சேதமடைந்தன. ஆனால், இந்த தாக்குதல் காரணமாக பயணிகளிடையே கடும் பீதி ஏற்பட்டது. 

  இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த சாலையில் போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
  Next Story
  ×