search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நரோட்டாம் மிஷ்ரா
    X
    நரோட்டாம் மிஷ்ரா

    மோடி பிறந்த நாளில் 32 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி: ம.பி. மந்திரி சொல்கிறார்

    மெகா முகாம்கள் நடத்தி ஒவ்வொரு மாநிலமும் அதிக அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
    இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதுவரை 75 கோடிக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. டிசம்பருக்குள் அனைவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதை இந்தியா இலக்காக கொண்டுள்ளது.

    தமிழகத்தில் நேற்று மெகா முகாம் நடத்தப்பட்டு 28 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிலையில் மத்திய பிரதேச மாநில அரசு மோடி பிறந்த நாளான செப்டம்பர் 17-ந்தேதி 32 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது.

    இதுகுறித்து அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டாம் மிஷ்ரா கூறுகையில் ‘‘செப்டம்பர் 17-ந்தேதி பிரதமர் மோடியின் பிறந்த நாள். அன்றைய தினம் 37 லட்சம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்த இருக்கிறோம். 4.19 கோடி பேருக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில 76 சதவீதம் முதல் டோஸ், 18 சதவீதம் 2-வது டோஸ் ஆகும். செப்டம்பர் 26-ந்தேதிக்குள் 5.18 கோடி பேருக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த முதலமைச்சர் இலக்கு நிர்ணயித்துள்ளார். நாங்கள் அந்த இலக்கை எட்ட முயற்சி செய்வோம்’’ என்றார்.
    Next Story
    ×