என் மலர்
செய்திகள்

மந்திரி சுதாகர்
கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு காசநோய்: கர்நாடக மந்திரி அதிர்ச்சி தகவல்
கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட 23 முதல் 25 பேருக்கு காசநோய் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது என அம்மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று உலகத்தையே ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. பொருளாதாரம் முதல் உடல் ஆரோக்கியம் வரை எதையும் விட்டுவைக்கவில்லை. தற்போதுதான் பொருளாதாரத்தில் ஒவ்வொரு நாடுகளும் மெதுமெதுவாக மீண்டு வருகின்றன.
ஆனால் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்த சிலருக்கு பக்க நோய்கள் தாக்கப்பட்டு அவதிப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டது. தமிழகத்தில் கூட கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பரிசோதனை செய்து கொள்ள தனிப்பிரிவு தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட 23 முதல் 25 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது என்று கர்நாடக மாநில சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் கே. சுதாகர் தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ள அனைவருக்கும் காசநோய் பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.
ரத்தம் மற்றும் உடல் உறுப்பு தானம் ஆகியவற்றிற்கு கொரோனா தடையாக உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்க சில சிறப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்’’ என்றார்.
Next Story