என் மலர்
செய்திகள்

சசிதரூர்
மனைவி சுனந்தா புஷ்கர் மர்ம மரண வழக்கு- சசிதரூர் விடுதலை
பிரேத பரிசோதனையில் சுனந்தா புஷ்கர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டு இருந்தது.
புதுடெல்லி:
காங்கிரஸ் மூத்த தலைவரான சசிதரூர் எம்.பி. ஏற்கனவே விவாகரத்து பெற்று இருந்த நிலையில் தொழில் அதிபர் சுனந்தா புஷ்கரை 2010-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
அவர்கள் இருவரும் 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தனர். 17-ந் தேதி சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

ஆனால் பிரேத பரிசோதனையில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டு இருந்தது. இது சம்பந்தமாக டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் சசிதரூர் மீது மனைவியை கொடுமைப்படுத்துதல், தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தினார்கள். சுனந்தா புஷ்கரை சசிதரூர் கொலை செய்துவிட்டதாக கூட புகார்கள் எழுந்தன.

ஆனால் பிரேத பரிசோதனையில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டு இருந்தது. இது சம்பந்தமாக டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் சசிதரூர் மீது மனைவியை கொடுமைப்படுத்துதல், தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு டெல்லி சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இதை விசாரித்த நீதிபதி கீதாஞ்சலி கோயல், சசிதரூர் மீதான குற்றங்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இதையும் படியுங்கள்...இந்தியாவில் புதிதாக 35,178 பேருக்கு கொரோனா தொற்று
Next Story