search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேசியக் கொடி ஏற்றி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி
    X
    தேசியக் கொடி ஏற்றி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி

    நாட்டின் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும் -பிரதமர் மோடி சுதந்திர தின உரை

    ஆகஸ்ட் 14ல் நாடு பிரிவினை அடைந்தபோது மக்கள் கடும் துயரை அனுபவித்ததாகவும், சுதந்திரம் பெற்றபோது நாடு பிரிவினை அடைந்த வேதனையை இன்னமும் உணர்வதாகவும் மோடி பேசினார்.
    புதுடெல்லி:

    டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.  அவர் பேசியதாவது:-

    நாட்டு மக்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். நமது விடுதலை போராட்ட வீரர்களை நினைவுகூர்வதற்கான தினம் இன்று. மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட அனைவரின் தியாகத்தையும் நினைவுகூர்வோம். 

    கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது. கொரோனா காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், தடுப்பூசி கண்டுபிடித்தவர்கள் என அனைவருக்கும் எனது வணக்கங்கள். 

    தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய மோடி

    ஒலிம்பிக்கில் இந்தியா புதிய வரலாறு படைத்தது மிகப்பெரிய விஷயம். டோக்கியோ ஒலிம்பிக்கில் நம்மை பெருமைப்படுத்திய விளையாட்டு வீரர்கள் இன்று நம்மிடையே இருக்கிறார்கள். இன்று அவர்களின் சாதனையை பாராட்ட வேண்டும் என நாட்டு மக்களை கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் நம் இதயங்களை வென்றது மட்டுமல்லாமல், எதிர்கால சந்ததியினருக்கும் ஊக்கம் அளித்துள்ளனர். அவர்கள் இந்த விழாவில் பங்கேற்றது பெருமை அளிக்கிறது. 

    நகரம், கிராமம் என்றில்லாமல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வளர்ச்சியை அடைய உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும். உள்கட்டமைப்பை எந்த நாட்டை விடவும் குறைவானவர்கள் இல்லை என்பதை நிரூபித்து காட்டவேண்டும். நமது லட்சியங்களை அடைய கடினமான உழைப்பை செலுத்த வேண்டும். ஒரு வினாடியைக் கூட வீணாக்காமல் உழைக்கத் தொடங்க வேண்டும். 

    ஆகஸ்ட் 14ல் நாடு பிரிவினை அடைந்தபோது மக்கள் கடும் துயரை அனுபவித்தனர். சுதந்திரம் பெற்றபோது நாடு பிரிவினை அடைந்த வேதனையை இன்னமும் உணர்கிறேன். எனவே, அந்த தினத்தை பிரிவினை அதிர்ச்சி நினைவு தினமாக அனுசரிக்க முடிவு செய்தோம்.

    கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் உலகத்திலேயே இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது. கொரோனா தடுப்பூசியை இந்தியாவிலேயே உருவாக்கியதால்தான் மக்களுக்கு தடுப்பூசி கிடைக்கிறது. போலியோ தடுப்பூசியை செலுத்துவதற்கு நமக்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால், கொரோனா தடுப்பூசி அப்படியல்ல. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது கட்டமைப்பு குறைவாக இருந்தாலும், நாம் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×