search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா  வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    இந்தியாவில் கொரோனாவின் 2-ம் அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை- மத்திய அரசு

    ஆக்சிஜன் அதிகரிப்பு, அதிக உயிரிழப்பு சேதத்தை உண்டாக்கிய கொரோனா தொற்றின் 2-வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை காரணமாக இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டிய வண்ணம் இருந்தது. தற்போது படிப்படியாக குறைந்து சுமார் 50 ஆயிரத்திற்குள் இருக்கிறது. இதனால் 3-வது அலை முடிவுக்கு வந்துள்ளதாக கருதப்படுகிறது. பெரும்பாலான மாநிலங்களை தளர்வுகளை அறிவித்துள்ளன.

    இந்த நிலையில் கொரோனா தொற்றின் 2-வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 75 மாவட்டங்களில் 10 சதவீதத்திற்கு மேல் கொரோனா பரவலும், 92 மாவட்டங்களில் 5 முதல் 10 சதவீத கொரோனா பரவலும் உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் கொரோனா 2-வது அலை உருவாக உருமாறிய டெல்டா கொரோனா வைரஸ் முக்கிய காரணமாக கருதப்பட்டது.
    Next Story
    ×