என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
ப.சிதம்பரம்
குதிரைதான் வண்டியை இழுக்க வேண்டும்... ஜம்மு காஷ்மீர் தேர்தல் குறித்து ப.சிதம்பரம் கருத்து
By
மாலை மலர்25 Jun 2021 4:45 AM GMT (Updated: 25 Jun 2021 7:41 AM GMT)

காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து மற்றும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும், சட்டப்பேரவை தேர்தல் இப்போது வேண்டாம் என ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் கூறி உள்ளனர்.
சென்னை:
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தொகுதி மறு வரையறை பணிகள் முடிந்த பிறகு ஜம்மு காஷ்மீரில் தேர்தலுக்கான நடைமுறை துவங்கும் என கூறி உள்ளார்.
ஆனால், காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து மற்றும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும், சட்டப்பேரவை தேர்தல் இப்போது வேண்டாம் என பெரும்பாலான ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் கூறி உள்ளனர்.

இதே கருத்தை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரமும் கூறி உள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு முதலில் மாநில அந்தஸ்து வழங்கி அதன் பிறகு தேர்தல் நடத்த வேண்டும் என அவர் கூறியிருக்கிறார்.
ஜம்மு காஷ்மீருக்கு முதலில் மாநில அந்தஸ்து வழங்குவதையே காங்கிரஸ் மற்றும் ஜம்மு காஷ்மீரின் பிற கட்சிகள் மற்றும் தலைவர்கள் விரும்புகிறார்கள். அதன்பின்னர் தேர்தல்களை விரும்புகிறார்கள். ஆனால், முதலில் தேர்தல், அதன்பிறகே மாநில அந்தஸ்து என்பதே அரசின் பதிலாக உள்ளது.
குதிரைதான் வண்டியை இழுக்க வேண்டுமே தவிர, வண்டியால் குதிரையை இழுக்க முடியாது. அதேபோல், ஒரு மாநிலம் தேர்தலை நடத்த வேண்டும். அத்தகைய தேர்தல்கள் மட்டுமே சுதந்திரமாகவும் நியாயமானதாகவும் இருக்கும். அரசாங்கம் ஏன் முன்னால் வண்டியையும் பின்னால் குதிரையையும் கட்டி இழுக்க விரும்புகிறது? இது வினோதமானது’ என ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×