search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனா 3-வது அலை, குழந்தைகளை அதிகம் தாக்குமா? - டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் விளக்கம்

    பூஞ்சை நோய்களை அவற்றின் நிறம் அடிப்படையில் கருப்பு, வெள்ளை, மஞ்சள் என்று வகைப்படுத்துவது குழப்பத்தை உருவாக்குகிறது.
    புதுடெல்லி:

    கொரோனா 3-வது அலை, குழந்தைகளை அதிகம் தாக்குமா என்பது குறித்து டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் விளக்கம் அளித்தார்.

    டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பூஞ்சை நோய்களை அவற்றின் நிறம் அடிப்படையில் கருப்பு, வெள்ளை, மஞ்சள் என்று வகைப்படுத்துவது குழப்பத்தை உருவாக்குகிறது. ஏனென்றால் ஒரே வகையான பூஞ்சை, வெவ்வேறு நிறத்தில் காணப்படுகிறது. எனவே, நிறத்தின் அடிப்படையில் கூறாமல், பெயர் அடிப்படையில் பூஞ்சையை குறிப்பிடுவதே நல்லது.

     டாக்டர் ரந்தீப் குலேரியா


    ஆக்சிஜன் சிகிச்சைக்கும், கருப்பு பூஞ்சை வருவதற்கும் சம்பந்தம் இருப்பதாக எந்த ஆதாரமும் இல்லை. ஏனென்றால், வீட்டில் ஆக்சிஜன் உதவியின்றி சிகிச்சை பெறுபவர்களுக்கும் கருப்பு பூஞ்சை வருகிறது. எனவே, இதற்கு உறுதியான தொடர்பு இல்லை.

    கொரோனாவைப் போல், கருப்பு பூஞ்சை தொற்றக்கூடிய வியாதி அல்ல. பூஞ்சை வந்தவர்களில் 90 முதல் 95 சதவீதம்பேர், நீரிழிவு நோயாளிகளாகவோ அல்லது ஸ்டீராய்டு மருந்து பயன்படுத்துபவர்களாகவோ இருக்கிறார்கள். மற்றவர்களிடம் மிக அபூர்வமாகவே கருப்பு பூஞ்சை காணப்படுகிறது.

    நீரிழிவு நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை தாக்கும் ஆபத்து அதிகம் என்பதால், அவர்கள் உடல் சுத்தத்தை கடைப்பிடிக்க வேண்டும். ஆக்சிஜன் செறிவூட்டிகளை பயன்படுத்துபவர்கள், அதை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கருப்பு பூஞ்சை நோயாளிகளுக்கு மிக கவனமாக ஆபரேஷன் செய்யாவிட்டால், பின்விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

    கொரோனா 3-வது அலை, குழந்தைகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கோ, அதிகமான குழந்தைகளை தாக்கும் என்பதற்கோ ஆதாரம் இல்லை. முதல் இரண்டு அலைகளை எடுத்துக்கொண்டால், ஒரே மாதிரிதான் இருக்கின்றன.

    குழந்தைகள் பாதுகாப்பாகவே உள்ளனர். அவர்களை தாக்கினால் கூட லேசானா தொற்றாகவே இருந்தது. வைரசில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், குழந்தைகளை அதிகமாக தாக்க வாய்ப்பில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது உடன் இருந்த மத்திய சுகாதார அமைச்சக இணை செயலாளர் லவ் அகர்வால், பைசர், மாடர்னா ஆகிய வெளிநாட்டு தடுப்பூசிகளை மாநிலங்கள் பெற மத்திய அரசு வழிவகை செய்து தருவதாக தெரிவித்தார்.
    Next Story
    ×