search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடிகை ராகிணி திவேதி
    X
    நடிகை ராகிணி திவேதி

    போதைப்பொருள் வழக்கில் இருந்து விரைவில் வெளியே வருவேன்: நடிகை ராகிணி

    சினிமாவில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்துவதாகவும், போதைப்பொருள் வழக்கில் இருந்து விரைவில் வெளியே வருவேன் என்றும் நடிகை ராகிணி தெரிவித்துள்ளார்.
    பெங்களூரு :

    கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ராகிணி திவேதி. இவர், போதைப்பொருட்கள் பயன்படுத்தியது மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்தார். பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் 103 நாட்கள் அவர் சிறைவாசம் அனுபவித்திருந்தார். தற்போது ஜாமீனில் அவர் வெளியே வந்துள்ளார்.

    சிறையில் இருந்து வெளியே வந்த பின்பு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் நடிகை ராகிணி இருந்தார். இந்த நிலையில், பெங்களூருவில் நேற்று நடிகை ராகிணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    போதைப்பொருள் விவகாரம் குறித்து அதிகம் பேச விரும்பவில்லை. நான் எப்படி என்பது பற்றி எனக்கு தெரிந்தவர்களுக்கு நன்கு தெரியும். குறிப்பாக என்னுடைய தந்தை, தாய்க்கு நான் எப்படி என்பது தெரியும். நான் கஷ்டத்தை அனுபவித்து கொண்டிருந்த போது, எனக்கு உறுதுணையாகவும், ஆறுதலாகவும் இருந்தது என்னுடைய பெற்றோர் தான். போதைப்பொருள் வழக்கில் இருந்து கூடிய விரைவில் வெளியே வருவேன். நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதை நிரூபிப்பேன். அதுவரை இந்த விவகாரம் பற்றி பேச விரும்பவில்லை.

    கடந்த ஆண்டு (2020) எனக்கு மட்டும் அல்ல, அனைத்து தரப்பினருக்கும் மிகுந்த வேதனை, கஷ்டங்களை கொடுத்திருந்தது. 2021-ம் ஆண்டு அனைவருக்கும் நன்மை கிடைக்கும். கடந்த ஆண்டு என்னை பற்றி தொலைகாட்சிகளில் பல்வேறு விவாதங்கள் நடந்து முடிந்து விட்டது. பிக்பாஸ்-8 நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வருகின்றன. அந்த தகவல்கள் உண்மை அல்ல.

    தற்போது எனது கவனம் முழுவதும் சினிமாவில் நடிப்பதும், சமூக நலப்பணிகளில் ஈடுபடுவது தான். அதில், எனது முழு கவனத்தையும் செலுத்துகிறேன். சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் வருகின்றன. கர்மா-3 படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. அந்த படம் முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்டதாக இருக்கும். சினிமா படங்களில் தொடர்ந்து நடிப்பேன். உலகில் தற்போது கிரிக்கெட் விளையாட்டு மக்களிடையே பிரபலம் அடைந்து வருகிறது.

    மாற்றுத்திறனாளிகளுக்காக சர்வதேச டி.10 கிாிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. அடுத்த மாதம் மார்ச் 11-ந் தேதியில் இருந்து தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த கிரிக்கெட் போட்டிக்கான விளம்பர தூதராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். இது மகிழ்ச்சியை அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×