என் மலர்

  செய்திகள்

  கொரோனா பரிசோதனை
  X
  கொரோனா பரிசோதனை

  கேரளாவில் இன்று புதிதாக 5,281 பேருக்கு கொரோனா தொற்று: 16 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரளாவில் இன்று புதிதாக 5,281 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
  கேரளாவில் இன்று புதிதாக 5,281 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,88,655 ஆக உயர்ந்துள்ளது.

  இன்று 5,692 பேர் டிஸ்சார்ஜ் ஆக, குணமடைந்தோரின் எண்ணிக்கை 9.20 லட்சமாக உயர்ந்துள்ளது. தற்போது வரை 63,915 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

  கடந்த 24 மணி நேரத்தில் 71,656 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 7.37 சதவீதம் பேருக்கு பாசிட்டிவ் முடிவு வந்துள்ளது. இதுவரை 1.03 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

  பதனம்திட்டாவில் 694 பேருக்கும், எர்ணாகுளத்தில் 632 பேருக்கும், கோழிக்கோட்டில் 614 பேருக்கும், கொல்லத்தில் 579 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  இன்று 16 பேர் உயிரிழக்க, பலியானோரின் எண்ணிக்கை 3,936 ஆக உயர்ந்துள்ளது.
  Next Story
  ×