என் மலர்

  செய்திகள்

  விபத்து
  X
  விபத்து

  உத்தர பிரதேசத்தில் லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் ஐந்து பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேற்கு வங்காளத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்திற்கு இறந்தவர் உடலை ஆம்புலன்சில் எடுத்துச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் பலியாகினர்.
  மேற்கு வங்காள மாநிலத்தின் அசன்சோல் என்ற இடத்தில் வினித் சிங் என்பவர் மரணம் அடைந்துள்ளார். இவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கார் என்ற இடத்திற்கு உறவினர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

  ஆம்புலன்ஸ் உத்தர பிரதேசம் மாநிலம் கோபிகஞ்ச் பகுதியில் வரும்போது லாரி மீது திடீரென மோதியது. இந்த விபத்தில் இறந்து போன வினித் சிங்கின் குடும்ப உறுப்பினர் நான்கு பேரும், ஆம்புலன்ஸ் டிரைவரும் என ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

  வட மாநிலங்களில் தற்போது பனிமூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு எதிரே அருகில் வரும் வாகனம் கூட தெரிவதில்லை. இதன் காரணமாக விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
  Next Story
  ×