என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  ஜனவரி 26 குடியரசு நாளானது எப்படி? - வரலாற்று தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குடியரசு தினம் ஜனவரி 26 ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க எத்தனை நாட்கள் ஆனது என்பது குறித்த வரலாற்று தகவல்கள்.
  குடியரசு தினம் என்பது ஜனநாயக ரீதியில் ஒரு நாடு தங்கள் சொந்த சட்டதிட்டத்தின் கீழ் செயல்படுவதை குறிக்கும் நாளாகும். இந்தியாவில் 1950-ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. 

  நமது நாட்டிற்கான சட்டதிட்டங்கள் இயற்றப்பட்டு 1950 ஜனவரி 26 முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதுவே குடியரசு தினமாகவும் கொண்டாடப்படுகிறது. டாக்டர் அம்பேத்கர் 2 ஆண்டுகள் 11 மாதங்கள் பணியாற்றி இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திறம்பட இயற்றி தந்தார். 1946  டிசம்பர் 9 ஆம் தேதி இந்திய அரசியல் நிர்ணய மன்றத்தின் முதல் கூட்டம் நடந்தது. 1947 ஆகஸ்டு 29 ஆம் தேதி அம்பேத்கர் தலைமையில் அரசமைப்பு சட்ட வரைவுக் குழு உருவாக்கப்பட்டது. 

  வரைவு குழு உருவாக்கிய இந்திய அரசமைப்பு சட்டத்தை அரசமைப்பு நிர்ணய மன்றம் 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி ஏற்றுக்கொண்டது. இந்திய அரசியலமைப்பு உலகின் மிகப்பெரிய ஜனநாயக அரசியலமைப்பு ஆகும். இந்திய சட்டத்தில் 448 ஆர்டிகிள்கள் உள்ளன. இவை ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுதப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் குடியரசு தினம் மூன்று நாட்கள் கொண்டாடப்பட்டது. குடியரசு தினத்தில் ராணுவ அணிவகுப்பு 1955-ஆம் ஆண்டில் தான் முதன் முதலில் நடந்தது. டெல்லி ராஜ்பாத்தில் முதல் அணிவகுப்பு பிரமாண்டமாக நடத்தப்பட்டது. பாரத ரத்னா, பத்ம பூசண், கீர்த்தி சக்ரா போன்ற முக்கியமான பல தேசிய விருதுகள் குடியரசு தினத்தன்று வழங்கப்படுகிறது. 

  போர்க் காலங்களில் வீர தீர செயல்களில் ஈடுபட்டதற்காக பரம் வீர் சக்ரா, மகா வீர் சக்ரா, வீர் சக்ரா ஆகிய விருதுகளும், போர் இல்லாத காலங்களில் வீர தீர செயல்களில் ஈடுபட்டதற்காக அசோகச் சக்ரா, கீர்த்தி சக்ரா, சௌர்ய சக்ரா ஆகிய விருதுகளும் இந்திய அரசால் வழங்கப்படுகின்றன. குடியரசு தினவிழா அணிவகுப்பு டெல்லி ராஜபாதையில் குடியரசு மாளிகையில் தொடங்கி, இந்தியா கேட் வரையில் நடக்கும். கொரோனா கட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு விஜய் சவுக் முதல் நேஷன்ல் ஸ்டேடியம் வரை மட்டுமே அணிவகுப்பு என மாற்றப்பட்டது.

  குடியரசு தினநாளில் இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதியாக இருக்கும் குடியரசு தலைவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். குடியரசு தின அணிவகுப்பு இந்திய விமானப்படையின் அணிவகுப்புடன் முடிவுக்கு வரும் விஜய் சவுக்கில் குடியரசு நாள் அணிவகுப்பில் கலந்துகொண்ட முப்படை வீரர்களும் தங்கள் முகாமுக்கு திரும்பும் பாசறை திரும்புதல் நிகழ்வு மாலையில் நடைபெறுகிறது. 

  குடியரசு நாள் தோன்றிய வரலாறு

  சொந்த சட்டத்திட்டத்தின் கீழ் ஒரு நாடு செயல்படும் நாள். 

  ஜனவரி 26-ஐ வரலாற்றில் நினைவுகூர குடியரசு தின கொண்டாட்டம்.

  டாக்டர் அம்பேத்கர் 2 ஆண்டு 11 மாதம் பணியாற்றி அரசியலமைப்பை இயற்றினார்.

  1946 டிசம்பர் 9-இல் இந்திய அரசியல் நிர்ணய மன்ற முதல் கூட்டம்.

  1947 ஆகஸ்டு 29-இல் அரசமைப்பு சட்ட வரைவுக் குழு உருவாக்கம்.

  1949 நவம்பர் 26-இல் இந்திய அரசமைப்பு சட்டம் அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் ஏற்பு. 

  இந்திய அரசியலமைப்பு, உலகின் மிகப்பெரிய ஜனநாயக அரசியலமைப்பு ஆரம்பத்தில் குடியரசு தினம் 3 நாட்கள் கொண்டாடப்பட்டது. 

  பாரத ரத்னா, பத்ம பூசண், கீர்த்தி சக்ரா தேசிய விருதுகள் வழங்கப்படுகிறது.

  பரம் வீர் சக்ரா, மகா வீர் சக்ரா, வீர் சக்ரா விருதுகளும் வழங்கப்படுகிறது.

  குடியரசு மாளிகையில் தொடங்கி, இந்தியா கேட் வரை அணிவகுப்பு.அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் குடியரசு தலைவர் .

  விமானப்படை அணிவகுப்புடன் முடிவுக்கு வரும். 

  முப்படை வீரர்கள் முகாமுக்கு திரும்பும் பாசறை திரும்புதல் நிகழ்வு

  Next Story
  ×