என் மலர்

  செய்திகள்

  மம்தா பானர்ஜி
  X
  மம்தா பானர்ஜி

  ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷத்தால் நேதாஜியை பா.ஜ.க. அவமதித்துவிட்டது - மம்தா குற்றச்சாட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாள் விழாவின்போது ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் எழுப்பி நேதாஜியை பா.ஜ.க. அவமதித்துவிட்டது என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
  கொல்கத்தா:

  கொல்கத்தாவில் பிரதமர் மோடி பங்கேற்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாள் விழாவில் சிலர் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் எழுப்பியதால், அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, விழாவில் பேச மறுத்துவிட்டார். இதனால் சர்ச்சை எழுந்தது.

  இந்நிலையில், அம்மாநிலத்தின் புர்சுராவில் நேற்று நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் மம்தா பேசியதாவது:-

  ‘பா.ஜ.க. ஒரு வெளியூர் கோஷ்டி. மேற்கு வங்காளத்தின் முக்கிய ஆளுமைகளை அவமதிப்பதை அவர்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர். தற்போது அந்தப் பட்டியலில் நேதாஜியையும் சேர்த்துவிட்டனர்.

  நீங்கள் உங்கள் வீட்டுக்கு யாரையாவது அழைத்து, அவமதிப்பீர்களா? அதுவா மேற்கு வங்காளத்தின் அல்லது நம் நாட்டின் கலாசாரம்? அவர்கள் நேதாஜியை புகழ்ந்து கோஷங்கள் எழுப்பியிருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர்கள் என்னைச் சீண்டுவதற்காக, நிகழ்ச்சிக்கு சம்பந்தமில்லாத கோஷங்களை எழுப்பினர். நாட்டின் பிரதமர் முன்னிலையில் நான் அவமதிக்கப்பட்டேன். இதுதான் பா.ஜ.க.வின் கலாசாரம்.

  சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் துரோகிகள். வரும் தேர்தலில் தங்களுக்கு சீட் கிடைக்காது என்று தெரிந்தே அவர்கள் வெளியேறி இருக்கின்றனர். அவர்கள் வெளியேறியது நல்லதே. இல்லாவிட்டால் நாங்களே அவர்களை வெளியே தள்ளியிருப்போம். கட்சியை விட்டுச்செல்ல விரும்புபவர்கள், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியேறலாம்.’

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×