என் மலர்

  செய்திகள்

  ராம்நாத் கோவிந்த்
  X
  ராம்நாத் கோவிந்த்

  4 நாள் பயணமாக ஜனாதிபதி டையு தீவுக்கு இன்று செல்கிறார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குஜராத் மாநிலம் அருகே உள்ள தீவுப்பகுதியான டையு தீவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 4 நாள் பயணமாக இன்று (வெள்ளிக்கிழமை) செல்கிறார்.
  புதுடெல்லி:

  குஜராத் மாநிலம் அருகே உள்ள தீவுப்பகுதி, டையு ஆகும். இது, தாத்ரா-நகர் ஹவேலி-டாமன்-டையு யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்டது. இந்த டையு தீவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 4 நாள் பயணமாக இன்று (வெள்ளிக்கிழமை) செல்கிறார்.

  இன்று ஜலந்தர் சர்க்யூட் இல்லத்தை திறந்து வைக்கிறார். நாளை (சனிக்கிழமை) பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், திறந்தும் வைக்கிறார். வடோதரா ஐ.ஐ.டி. சர்வதேச வளாகத்தின் முதல்கல்வி ஆண்டை தொடங்கி வைக்கிறார்.

  சாத்வாடியில் ஒரு பள்ளிக்கு அடிக்கல் நாட்டுகிறார். பழ, காய்கறி சந்தையை தரம் உயர்த்த அடிக்கல் நாட்டுகிறார். ஒருங்கிணைந்த நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

  ஐ.என்.எஸ். குக்ரி நினைவுச் சின்னத்தை திறந்து வைக்கிறார். 27-ந் தேதி, டையு கோட்டைக்கு சென்று ஒலி-ஒளி காட்சியை தொடங்கி வைக்கிறார். 28-ந் தேதி டெல்லி திரும்புகிறார்.
  Next Story
  ×