search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிரக் பஸ்வான்
    X
    சிரக் பஸ்வான்

    நிதிஷ் குமார் நிச்சயம் பா.ஜ.க.வுக்கு குழிபறிப்பார் -பீகார் அரசியலில் பரபரப்பை எகிறச்செய்த சிரக் பஸ்வான் கருத்து

    பீகார் மாநிலத்தில் தேர்தல் முடிந்ததும் நிதிஷ் குமார் பாஜக கூட்டணியைவிட்டு வெளியேறி ஆர்ஜேடியுடன் செல்ல திட்டமிட்டிருப்பதாக சிரக் பஸ்வான் கூறி உள்ளார்.
    பாட்னா:

    பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிரக் பஸ்வான் வெளியிட்டுள்ள டுவிட்டரில் வெளியிட்ட அதிரடியான பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சிரக் பஸ்வான் கூறுகையில், ‘நிதீஷ் குமாருக்கு மக்கள் வழங்குட்ம ஒவ்வொரு வாக்கும் பீகாரை பலவீனப்படுத்தி அழிப்பது மட்டுமல்லாமல், ஆர்ஜேடி மற்றும் மெகா கூட்டணியை பலப்படுத்தும். அவர் தேர்தலுக்குப் பிறகு பாஜக கூட்டணியை விட்டு வெளியேறி ஆர்ஜேடியுடன் செல்ல ஆயத்தங்களைச் செய்துள்ளார். இதற்கு முன்பு கூட, ஆர்.ஜே.டி.யின் ஆசீர்வாதத்துடன் ஆட்சியமைத்துள்ளார்’ என்றார்.

    ‘பீகார் மாநிலம் முதல் 15 ஆண்டுகள் வளர்ச்சியே இல்லாமல் பிரபலமற்று இருந்தது. இரண்டாவது 15 ஆண்டுகளில் பீகார் மோசமான நிலையில் இருந்தது. ஆனால் இப்போது உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களுடனும், நாங்கள் பீகார் மக்களுக்கு முன்னுரிமை மற்றும் நிதிஷ் குமார் இல்லாத அரசாங்கத்தை உருவாக்க வேண்டும். நிதிஷ்குமார் கட்சியை விட லோக் ஜனசக்தி கட்சி அதிக இடங்களில் போட்டியிடுகிறது. நிதீஷ் குமாரை விட நாங்கள் அதிக இடங்களை வென்ற பிறகு, பாஜக-லோக் ஜனசக்தி கூட்டணி  அரசு அமையும்’ என்றும் சிரக் பஸ்வான் கூறி உள்ளார்.

    பீகார் மக்கள் தவறாமல் வெளியே வந்து தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தவேண்டும் என்றும் சிரக் பஸ்வான் கேட்டுக்கொண்டுள்ளார்.
    Next Story
    ×