என் மலர்
செய்திகள்

ஆஸ்கார் விருது வென்ற பானு அத்தையா
ஆஸ்கார் விருது வென்ற ஆடை வடிவமைப்பாளர் பானு ஆதெய்யா காலமானார்
சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கார் விருது பெற்ற பானு ஆதெய்யா உடல்நலக் குறைவால் மும்பையில் காலமானார்.
மும்பை:
மும்பையை சேர்ந்த பானு ஆதெய்யா, பிரபல இந்தி திரைப்படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்து வந்தார்.
பாலிவுட் ஜாம்பவான்களான குரு தத், யஷ் சோப்ரா, ராஜ் கபூர் போன்றவர்களின் படங்கள் என 100-க்கும் அதிகமான படங்களில் பணியாற்றியுள்ளார்.
கடந்த 1983-ம் ஆண்டு இயக்குனர் ரிச்சர்டு அட்டன்பரோ இயக்கத்தில் வெளியான, ‘காந்தி’ படத்தில் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்காக ஆஸ்கார் விருது வென்றார்.மேலும், பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இதற்கிடையே, மும்பையில் வசித்து வந்த பானு ஆதெய்யா (91), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த பானு அத்தையா நேற்று காலமானார். பானு ஆதெய்யா மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Next Story