என் மலர்

  செய்திகள்

  கடத்தப்பட்ட தங்கம் - தாவூத் இப்ராஹிம்
  X
  கடத்தப்பட்ட தங்கம் - தாவூத் இப்ராஹிம்

  கேரள தங்கக் கடத்தல்- தாவூத் இப்ராஹிம் கும்பலுக்கும் தொடர்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரள தங்கக் கடத்தல் வழக்கில் பயங்கரவாதி தாவூத் இப்ராஹிம் கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
  புதுடெல்லி:

  வெளிநாடுகளிலிருந்து கேரளாவிற்கு நூற்றுக்கணக்கான கிலோ தங்கம் கடத்தி வரப்பட்ட விவகாரம் வெளிச்சத்திற்கு வந்து இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக ஸ்வப்னா சுரேஷ் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  கேரள தங்கக் கடத்தல் வழக்கில் பயங்கரவாதி தாவூத் இப்ராஹிம் கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

  தங்கம் கடத்தல் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்குவதை எதிர்த்து தங்க கடத்தலில் இருந்து கிடைக்கும் வருமானம் தேச எதிர்ப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளது.

  தூதரக தொடர்புகளை மேலும் ஆராய வேண்டும் என்று என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

  குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ரமீஸ், தான்சானியாவில் ஒரு வைர வியாபாரியாக இருப்பதாகவும், அங்குள்ள தங்கத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விற்றதாகவும் கூறினார்.

  Next Story
  ×