என் மலர்
செய்திகள்

பியூஷ் கோயல்-பஸ்வான்
பஸ்வான் வகித்து வந்த நுகர்வோர் விவகாரம், உணவுத் துறை பியூஷ் கோயல் வசம் ஒப்படைப்பு
மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் மரணம் அடைந்ததையடுத்து, அவரது துறை ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
லோக் ஜன சக்தி தலைவரும் மத்திய உணவுத்துறை மந்திரியுமான ராம்விலாஸ் பஸ்வான் (வயது 74) டெல்லியில் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். பஸ்வானின் உடல் டெல்லியில் இருந்து இன்று விமானம் மூலம், அவரது சொந்த மாநிலமான பீகாருக்கு கொண்டு செல்லப்படுகிறது. நாளை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
இந்நிலையில், மறைந்த மத்திய மந்திரி பஸ்வான் வசம் இருந்த நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் துறை மத்திய மந்திரி பியூஷ் கோயல் வசம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பியூஷ் கோயல் வசம் ஏற்கனவே மத்திய ரெயில்வே துறை மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story