search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி
    X
    நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி

    ஜம்மு காஷ்மீரில் திடீர் நிலநடுக்கம் - மக்கள் பீதி

    ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் நேற்று இரவு திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 3.6 ஆக பதிவான நில நடுக்கத்தால் பல்வேறு பகுதிகளில் அதிர்ந்தன.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகர் நேற்று இரவு 9.40 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ஸ்ரீநகரின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 3.6 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.  

    சில நிமிடங்கள் நீடித்த இந்த நிலநடுக்கம் காரணமாக ஸ்ரீநகர் பகுதியில் அமைந்துள்ள பல்வேறு கட்டிடங்கள் சற்று அதிர்ந்தன. இதனால் மக்கள் சற்று பதற்றம் அடைந்தனர்.

    ஆனாலும், நிலநடுக்கத்தின் அளவு மிகவும் குறைவாக இருந்ததால் கட்டிடங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    Next Story
    ×