search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்வப்னா சுரேஷ்
    X
    ஸ்வப்னா சுரேஷ்

    கேரளா தங்கம் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்பட 5 பேர் நாளை ஆஜராக கோர்ட் உத்தரவு

    கேரளா தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்பட 5 பேர் நாளை ஆஜராக கொச்சி என்.ஐ.ஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவின் மணப்பாடில் உள்ள அந்நாட்டு தூதரக முகவரிக்கு வந்த பெட்டியில் 30 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்கள்.

    இந்த கடத்தலுக்கு பின்னணியாக தூதரகத்தில் ஏற்கனவே பணியாற்றிய ஸ்வப்னா சுரே‌‌ஷ் செயல்பட்டுள்ளார் என்பது விசாரணையில் வெளிவந்தது. பின்னர் அவர் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் பெங்களூருவில் வைத்து கைது செய்யப்பட்டார். இதுவரை ரூ.100 கோடி தங்கம் கடத்தப்பட்டு இருக்க கூடும் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

    இந்த வழக்கில் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஸ்வப்னா சுரேஷ், திரிச்சூர் மாவட்டத்தின் விய்யூரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இந்நிலையில் கேரளா தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உட்பட 5 பேர் நாளை ஆஜராக கொச்சி என்.ஐ.ஏ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 5 பேரையும் காவலில் விசாரிக்க என்.ஐ.ஏ. கோரியதையடுத்து நேரில் ஆஜராக கொச்சி என்.ஐ.ஏ.நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஸ்வப்னா சுரேஷ் நெஞ்சுவலி காரணமாக திருச்சூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×