என் மலர்

  செய்திகள்

  சுப்பிரமணியன் சுவாமி
  X
  சுப்பிரமணியன் சுவாமி

  லடாக் நிலவரம்... பாராளுமன்றத்தில் பிரதமர் தெளிவுபடுத்துவார் என நம்புகிறேன்- சுப்பிரமணியன் சுவாமி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  லடாக் பிரச்சனைக்கு தீர்வு காணும் வெளியுறவு அமைச்சர்கள் இடையிலான 5 அம்ச ஒப்பந்தத்தை பிரதமர் மோடி சரி செய்ய வேண்டும் என்றும் சுப்பிரமணியன்சுவாமி கூறி உள்ளார்.
  புதுடெல்லி:

  கொரோனா அச்சுறுத்தல், சீனாவுடன் எல்லை பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி உள்ளது. இந்த கூட்டத்தொடரில் கொரோனா பிரச்சினை, லடாக் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கிளப்பி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

  இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

  லடாக்கில் ஏற்கனவே உள்ள நிலையை உறுதி செய்வதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது என்பதை பாராளுமன்றத்தில் இன்று பிரதமர் தெளிவுபடுத்துவார் என்று நம்புகிறேன். அதாவது, சீன துருப்புக்கள் ஏப்ரல் 18-க்கு முந்தைய நிலைக்கு திரும்ப வேண்டும். எனவே வெளியுறவு அமைச்சர்கள் இடையிலான 5 அம்ச ஒப்பந்தத்தை பிரதமர் மோடி சரி செய்ய வேண்டும்.

  இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறி உள்ளார்.

  Next Story
  ×