search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி கோவில்
    X
    திருப்பதி கோவில்

    வருகிற 24-ந்தேதி திருப்பதியில் ரூ.200 கோடியில் தங்கும் விடுதிக்கு அடிக்கல் நாட்டு விழா

    கர்நாடக மாநில அரசின் சார்பில் திருமலையில் ரூ.200 கோடியில் பக்தர்களுக்காக கட்டப்பட உள்ள தங்கும் விடுதிக்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 24-ந்தேதி நடைபெறுகிறது.
    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    வழக்கமாக பிரம்மோற்சவத்தின் போது ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் 4 மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சாமி வீதிஉலா முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதில் கோவிலுக்குள் பிரம்மோற்சவத்தின் போது தினந்தோறும் எந்தெந்த வாகனத்தில் சாமி திருவீதிஉலா நடைபெறுமோ அந்த வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு ரங்கநாயகர் மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட உள்ளது.

    அதன்படி வருகிற 23-ந்தேதி கருடசேவை நடைபெற உள்ளது. கருட சேவையின் போது ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சாமிக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார்.

    இதைத் தொடர்ந்து அன்று இரவு திருமலையில் தங்கி மறுநாள் 24-ந்தேதி காலை ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

    கர்நாடக மாநில அரசின் சார்பில் திருமலையில் ரூ.200 கோடியில் பக்தர்களுக்கு தங்கும் விடுதி கட்டப்பட உள்ளது. இதற்காக 24-ந்தேதி கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவுடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் இணைந்து அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கின்றார்.

    இதற்கான ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×